உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் ஊழியர் மாயம்

தனியார் ஊழியர் மாயம்

ராயக்கோட்டை கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே காரகுப்பத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரி, 21. ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு விடுதியில் தங்கியிருந்தார். கடந்த, 5ம் தேதி மதியம், 2:30 மணிக்கு, நிறுவனத்திலிருந்து சென்ற லோகேஸ்வரி விடுதிக்கு செல்லவில்லை.அவரது தந்தை கோவிந்தராஜ், 43, ராயக்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதில், வேப்பனஹள்ளி அடுத்த தீர்த்தம் அருகே எடிப்பள்ளியை சேர்ந்த, தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., மூன்றாமாண்டு படிக்கும் மாணவன் பழனி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி