உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மூத்தோர் தடகள விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

மூத்தோர் தடகள விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

மூத்தோர் தடகள விளையாட்டு போட்டிவெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்கிருஷ்ணகிரி, டிச. 11-மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள விளையாட்டு போட்டிகள், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலஸ் மற்றும் சில்க்ஸ் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தின. இதில், 30 முதல், 100 வயது வரை உள்ள பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என, 230 பேர் பங்கேற்றனர். போட்டிகளை தடகள சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், 100 மீ., 200, 400, 800, 1,500, 5,000 மீ., ஓட்ட போட்டியும், தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கம்பு ஊன்றி தாண்டுதல், குண்டு, தட்டு, ஈட்டி மற்றும் சங்கிலி குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு, தடகள சங்க மாவட்டத்தலைவர் ரமேஷ், தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கத்துடன் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். தலைமை ஆசிரியர் யுவராஜ் சின்னசாமி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். சத்தியநாதன், ரமேஷ் ஆகியோர் இப்போட்டிகளை ஒருங்கிணைத்தனர். செயலாளர் மாதையன் நன்றி கூறினார்.இதில், முதல், 3 இடங்களில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் வரும் ஜன., 3, 4, 5 ஆகிய நாட்களில் மதுரையில் நடக்க உள்ள மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி