மேலும் செய்திகள்
ரூ.1.35 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
26-Oct-2025
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரிகை சாலையிலிருந்து முகலப்பள்ளி கிராமம் வரை, 76.46 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை, தேவிசெட்டிப்பள்ளி கிராமம் முதல், சூடகொண்டப்பள்ளி வரை, 80.76 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை, முத்தாலி முதல் கொத்துார் வரை, 78.86 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை, நந்திமங்கலம் முதல் காரப்பள்ளி வரை, 58.63 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை, சின்ன முத்தாலி முதல் காரப்பள்ளி வரை, 92.23 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு, முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோல், மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து, 17.80 லட்சம் ரூபாய் மதிப்பில், முத்தாலி முதல் பூதிநத்தம் வரை தார்ச்சாலை, சிறப்பு நிதியிலிருந்து தேவிசெட்டிப்பள்ளி கிராமத்தில், 5.90 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவு நீர் கால்வாய், படுதேப்பள்ளி கிராமத்தில், 9.21 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம், 4.20 கோடி மதிப்பிலான பணிகளை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Oct-2025