உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.18 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கம்

ரூ.18 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கம்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 24வது வார்டில் ராம்நகர் மாரியம்மன் கோவில் அருகில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு மைய கட்டடம் அமைக்க பூமி பூஜை நடந்தது. அதே போல ஓசூர் மாநகராட்சி, 34வது வார்டில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியையும் கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர். துணை மேயர் ஆனந்தய்யா, மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !