சீமான் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை: அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமையை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். அதை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ரவுண்டானாவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நா.த.க., மாவட்ட செயலாளர் பாஸ்கர் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.