மேலும் செய்திகள்
இறந்தவர் உடல் தடையை மீறி அடக்கம்
03-Nov-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மாதேபட்டி கிராமத்தில், 60க்கும் மேற்-பட்ட ஒரு தரப்பு மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு தனியாக மயானம் இல்லாத நிலையில், கிராம மக்கள் யாராவது உயிரி-ழந்தால், அப்பகுதியில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில், உடலை அடக்கம் செய்தனர். அதற்கு மற்றொரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த ஏப்.,ல் அரசு புறம்போக்கு நிலத்தில், 50 சென்ட் நிலம் மயானத்திற்கு ஒதுக்கி, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். ஆனால் நிலம் அள-வீடு செய்து கொடுக்கப்படவில்லை.நேற்று முன்தினம், மாதேப்பட்டி கிராமத்தை சேர்ந்த திம்ம-ராயன், 80, என்பவர், உடல்நிலை பாதித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடலை, அரசு ஒதுக்கிய மயான நிலத்தில் அடக்கம் செய்ய, மக்கள் ஏற்பாடு செய்தனர். அதற்கு, மயானத்திற்கு ஒதுக்கிய இடத்திற்கு சுற்றியுள்ள நிலங்களில், நாங்கள் காலம் காலமாக விவசாயம் செய்கிறோம். இங்கு மயானம் அமைக்கக்கூடாது. அந்த வழியாக உடலை எடுத்து செல்லக்கூடாது என, மற்-றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.மயானம் மற்றும் அதை சுற்றியுள்ள, 8 ஏக்கர் நிலம், அரசு புறம்-போக்கு என்பதால், யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என, போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து எதிர்ப்பு தெரி-வித்ததால், கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டு, எதிர்ப்பு தெரிவித்தவர்களை அப்புறப்படுத்தி, இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் எடுத்துச்சென்று, நேற்று அடக்கம் செய்தனர்.
03-Nov-2025