உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு பேட்ஜ் அணிந்து நேற்று, 2வது நாளாக பணியாற்றும் போராட்டம் நடந்தது. வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சக்தி வேல் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் பெருமாள், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போராட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திலுள்ள குறைகளை களைய வேண்டும். தமிழகத்தில் வருவாய்த்துறையில், இளநிலை, முதுநிலை வருவாய்த்துறை ஆய்வாளர் (ஆர்ஐ) பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடனே வெளியிட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.கருணை அடிப்படையிலான பணி நியமன உச்சவரம்பை, 5 சதவீதமாக குறைத்துள்ளதை ரத்து செய்து மீண்டும், 25 சதவீதமாக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அதீத பணி நெருக்கடி அளிப்பதை தவிர்ப்பதோடு, சிறப்பு பணிகள் மற்றும் சான்றிதழ் பணிகளுக்கு வட்டாரம் தோறும் கூடுதல் துணை தாசில்தார் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர். இதேபோல், அனைத்து தாலுகா அலுவலகத்திலும் கறுப்பு பேட்ஜ் அணிந்து அலுவலர்கள் பணியாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ