கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் தலைமையில் நடந்தது. பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம், 268 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட அவர், உரிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் தனஞ்செயன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.