உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மழையால் மின் துண்டிப்பு பொதுமக்கள் கடும் அவதி

மழையால் மின் துண்டிப்பு பொதுமக்கள் கடும் அவதி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார், போச்சம்பள்ளி, புலியூர், அர-சம்பட்டி, பாரூர், வேலம்பட்டி, வெப்பாலம்பட்டி, கண்ணு-கானுார், கொடமாண்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால், சுற்று வட்டார பகு-திகளில், 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை, 2:00 முதல், 4:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மீண்டும் நேற்று காலை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என, ஐந்து முறை மின்-சாரம் துண்டிக்கப்பட்டது.இதனால் சுற்று வட்டார மக்கள் கடும் அவதிக்கு ஆளாயினர். சூறாவளி காற்றுடன் கூடிய மழையினால் வெப்பாலம்பட்டி பகு-தியில், 2 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. அதேபோல் வெள்-ளபாறையூர் பகுதியில் புளியமரம் ஒன்று சந்துாரிலிருந்து காவே-ரிப்பட்டணம் சாலையில் விழுந்ததால், 2 மணி நேரம் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை