உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிறுவர் பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சிறுவர் பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

அரூர்: வரட்டாறு தடுப்பணையில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிறுவர்களுக்கான பூங்கா, பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளது. இதை சீரமைக்க, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில் கடந்த, 2007ல், வரட்டாறு தடுப்பணை கட்டப்பட்டது. இதன் அருகில், பல லட்சம் ரூபாய் மதிப்பில், பூங்கா அமைக்கப்பட்டது. இதில், ஊஞ்சல், சறுக்கு மரம், சிலைகள், மின்விளக்குகள், நடைபாதை, குழந்தைகள் ஓடி விளையாட இடம் என்று தனித்தனியே இடம் ஒதுக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த பூங்காவை, பொதுப்பணித் துறையினர் முறையாக பராமரிக்காததுடன், அதை பூட்டி வைத்துள்ளனர். தற்போது, இந்த இடத்தில் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட எப்பொருளும் இல்லை. மேலும் செடி, கொடிகள் முளைத்து, குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதுடன், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. எனவே, சேதமடைந்துள்ள பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர, பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ