உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.83.65 லட்சத்தில் தார்ச்சாலைக்கு பூஜை

ரூ.83.65 லட்சத்தில் தார்ச்சாலைக்கு பூஜை

தளி, கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், சின்னமதகொண்டப்பள்ளி சாலையிலிருந்து, கொடியாளம் வழியாக கொடகாரெட்டி வரை, பிரதமரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 83.65 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோர், பூமிபூஜை செய்து துவக்கி வைத்தனர். தளி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சீனிவாசலுரெட்டி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மஞ்சுநாத், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், பிரபாகர் ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை