உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.1.50 கோடியில் கோவில் புனரமைப்பு பணிக்கு பூஜை

ரூ.1.50 கோடியில் கோவில் புனரமைப்பு பணிக்கு பூஜை

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துாரில் பழமையான ஆதி விநாயகர் சுப்பிரமணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த பழமையான கோவிலை புனரமைப்பு செய்ய பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று கோவில் புனரமைப்பு குழுவினர்கள் டாக்டர் ராமநாதன், ஜவுளி ஆறுமுகம், ஆசிரியர் மகாலிங்கம் பேரூராட்சி தலைவர் மணி, சிவா உள்ளிட்டோர் கோவில் புனரமைப்பு செய்யும் பணிக்கு பூமி பூஜை செய்தனர். இக்கோவிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதாகவும், கோவில் பணிக்குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை