உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மழை நீர் வடிகால் கால்வாய் பணி

மழை நீர் வடிகால் கால்வாய் பணி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை, 9வது வார்டு தர்மராஜா கோவில் அருகே, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 2025-2026ன் படி, நிதி, 9.60 லட்சம் ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படுகிறது. இப்பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், நகர செயலாளர் கேசவன், ஒன்றிய செயலார் சூர்யா, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் பால்ராஜ், ஐ.டி., பிரிவு மண்டல தலைவர் ராஜசேகர், சிறுபான்-மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் மக்பூல், நகர துணை செயலாளர் சிவகுரு, ஐ.டி., பிரிவு நகர செயலாளர் விக்கி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி