உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / துவக்கப்பள்ளி வளாகத்தில் சேறும், சகதியுமாக மழை நீர்

துவக்கப்பள்ளி வளாகத்தில் சேறும், சகதியுமாக மழை நீர்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வெப்பாலம்-பட்டி கிராமத்தில், அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 55க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகம், மழை நீர் வெளியேறும் பகுதியில் உள்ளது. இதனால் அடிக்கடி மழை நீர் பள்ளி வளாகம் உள்ள பகுதியில் தேங்கி வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை பெய்த மழையால், மழைநீர் பள்ளி வளாகத்தில் தேங்கி, சேறும் சகதியுமாக இருந்ததால், மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர். பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க, அதிகாரிகள் நட-வடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை