பைக் மீது கார் மோதி விபத்து ரியல் எஸ்டேட் அதிபர் பலி
பைக் மீது கார் மோதி விபத்துரியல் எஸ்டேட் அதிபர் பலிதர்மபுரி, நவ. 21-தர்மபுரி மாவட்டம், பாகலஹள்ளி பஞ்., கெங்களாபுரத்தை சேர்ந்தவர் ராஜா, 54. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த, 18 அன்று காலை, 11:00 மணிக்கு, அன்பழகன் என்பவரின் ஹீரோ ஸ்பிண்டர் பைக்கில், ராஜா பின்னால் அமர்ந்து, தர்மபுரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கொலசனஹள்ளி அருகே சென்றார். அப்போது பின்னால் வந்த கிவிட் கார், பைக் மீது மோதியதில், ராஜா துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். அன்பழகன் படுகாயமடைந்தார். மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.