மேலும் செய்திகள்
விவசாயி கொலையில் சித்தப்பா மகன் கைது
03-Mar-2025
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பி.திப்பம்பட்-டியைச் சேர்ந்தவர் சதீஷ், 25, இவர் சிப்காட்டிலுள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு பாளேதோட்டத்திலி-ருந்து போச்சம்பள்ளிக்கு தன், பஜாஜ் பல்சர் பைக்கில் வந்த-போது, ஏர்ரம்பட்டியில் எதிரே வந்த மகேந்திரா டிராக்டர் மோதி, தலையில் பலத்த காயமடைந்து பலியானார். ஆத்திரம-டைந்த அவரின் உறவினர்கள் சம்மந்தப்பட்ட டிராக்டர் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், 6:30 வரை போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷன் எதிரில், தர்மபுரி - திருப்பத்துார் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் சம்மந்தப்பட்ட டிராக்டரை பறி-முதல் செய்து விபத்து ஏற்படுத்திய நபர் மீது, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.
03-Mar-2025