மாணவ, மாணவியருக்கு பஸ் வசதிக்கு கோரிக்கை
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கீரைப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். பள்ளி செல்ல பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவியர், 4 கி.மீ., துாரம் நடந்து சென்று வருகின்றனர். அவர்கள் பள்ளி சென்று வர வசதியாக, காலை மற்றும் மாலை நேரங்களில் கீரைப்பட்டிக்கு பஸ் இயக்க, பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.