உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொடர் மின்வெட்டை சரிசெய்ய கோரிக்கை

தொடர் மின்வெட்டை சரிசெய்ய கோரிக்கை

ஊத்தங்கரை, ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட, இந்திரா நகரில் கடந்த சில மாதங்களாக தொடர் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து, பலமுறை ஊத்தங்கரை மின்சார அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை, இந்திரா நகர் மக்கள் ஊத்தங்கரை மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக மின்தடை பிரச்னையை சரிசெய்வதாக உறுதி அளித்தார். அவரிடம் பொதுமக்கள் மனு கொடுத்து விட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை