உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜெயலலிதா நினைவு நாளை அனுசரிக்க வேண்டுகோள்

ஜெயலலிதா நினைவு நாளை அனுசரிக்க வேண்டுகோள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்-குமார் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 8ம் ஆண்டு நினைவு நாள் வரும், 5ல் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கிழக்கு மாவட்டம் முழுவதுமுள்ள, அ.தி.மு.க.,வினர் அந்தந்த பகுதியில், ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். அதுசமயம், கட்சியின் இன்னாள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும். இவ்-வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ