உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வழிகாட்டி பெயர் பலகை வைக்க கோரிக்கை

வழிகாட்டி பெயர் பலகை வைக்க கோரிக்கை

அரூர், அரூர் கச்சேரிமேட்டில், தர்மபுரி-திருப்பத்துார்-சேலம்- - அரூர் நகருக்குள் செல்லும் வழி என, நான்குசாலை சந்திப்பு உள்ளது. இங்கு வழிகாட்டி பெயர் பலகை எதுவும் இல்லாததால், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஓட்டுனர்கள் கனரக வாகனங்களை அரூர் நகருக்குள் ஓட்டிச் செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், செல்ல வேண்டிய சாலை குறித்த திசைகளுடன் கூடிய வழிகாட்டி பெயர் பலகை வைக்க வேண்டும் என, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை