உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாகனங்களில் டீசல் திருடிய 2 வாலிபர்களுக்கு காப்பு

வாகனங்களில் டீசல் திருடிய 2 வாலிபர்களுக்கு காப்பு

போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, மேட்டுபுலியூர், பாரூர், தேவீரஹள்ளி உள்ளிட்ட இடங்களில், எட்டு வாகனங்களில் கடந்த, 17-ல் டீசல் திருட்டு போனது. இதுகுறித்து வாகன உரிமையாளர்கள் பாரூர் போலீசில் புகார் அளித்திருந்தனர். அதன்படி தனிப்படை அமைத்து, போலீசார் டீசல் திருடியவர்களை தேடி வந்தனர். நேற்று முன்தினம் காரப்பட்டு அடுத்த, பெரியாகவுண்டனுாரை சேர்ந்த பூபாலன், 21, மற்றும் சத்தியநாதன், 28, ஆகியோரை டீசல் திருடிய வழக்கில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து டீசல் திருடி விற்ற பணம், 30,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். அவர்கள் டீசல் திருட்டுக்கு பயன்படுத்திய டாட்டா விஸ்டா காரை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது கல்லாவி, அரூர், காரிமங்கலம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேசன்களில் எட்டுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !