உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆடு மேய்த்தவரை அரிவாளால் வெட்டிய முதியவருக்கு காப்பு

ஆடு மேய்த்தவரை அரிவாளால் வெட்டிய முதியவருக்கு காப்பு

போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, பெரியகரடியூரில், நாகரசம்பட்டியை சேர்ந்த நாராயணன், 65, என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அதில் நேற்று முன்தினம் மாலை பெரியகரடியூரை சேர்ந்த ராஜா, 54, என்பவர், 10க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.அங்கு குடிபோதையில் காவல் பணியிலிருந்த பெரியகரடியூரை சேர்ந்த மாரியப்பன், 65, என்பவர், ராஜாவிடம், யாரை கேட்டு நிலத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறாய் என தகராறில் ஈடுபட்டு, அரிவாளால் ராஜாவை வெட்டினார்.படுகாயமடைந்த ராஜா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரத்தக்கறை அரிவாளுடன் மாரியப்பன், தட்டக்கல் பகுதியில் மொபட்டில் சென்ற போது, நாகரசம்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ