உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டூவீலர்கள் திருடிய வாலிபருக்கு காப்பு

டூவீலர்கள் திருடிய வாலிபருக்கு காப்பு

ஓசூர் :தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே சிக்கதிம்மனஹள்ளியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 30. ஓசூரில் ராயக்கோட்டை சாலையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிறுவனத்தின் எதிரே கடந்த, 15ம் தேதி மதியம், 2:00 மணிக்கு, தன் ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்தியிருந்தார். அதை மர்ம நபர் திருடி சென்றார். அதேபோல், ஓசூர் அருகே பாகலுார் பூக்கார தெருவை சேர்ந்த அப்துல்லா, 49, என்பவர் கடந்த, 13ம் தேதி காலை, 9:30 மணிக்கு, ஓசூர் உழவர் சந்தை எதிரே நிறுத்தியிருந்த அவரது ஹோண்டா யுனிகார்ன் பைக் மாயமானது. இந்த இரு சம்பவம் குறித்து, ஓசூர் டவுன் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், கிருஷ்ணகிரி அடுத்த பண்ணிஹள்ளியை சேர்ந்த அருணாச்சலம், 25, என்பவர், பைக்குகளை திருடியது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், பைக்கு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி