உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்த கார் ஓய்வுபெற்ற பெண் அதிகாரி பலி

மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்த கார் ஓய்வுபெற்ற பெண் அதிகாரி பலி

மகேந்திரமங்கலம்:தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அடுத்த, செந்தில்நகரை சேர்ந்தவர் வித்யாசாகர், 65. இவரது மனைவி புஷ்பலதா, 63. சமூக நல பாதுகாப்பு துறையில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களின் ஒரே மகள் திருமணமாகி அமெரிக்காவில் வசிக்கிறார். நேற்று மாலை வித்யாசாகர் டாடா விஸ்டா காரில், மனைவியுடன் ராயக்கோட்டையிலுள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றார். பொம்மனுார் மேம்பாலம் அருகே சென்றபோது, நாய் குறுக்கே வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பாலத்தில் இருந்து, 20 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், தம்பதி இருவரும் பலத்த காயமடைந்தனர்.மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடம் சென்று இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பலதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். வித்யாசாகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து, மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி