உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வருவாய் கிராம ஊழியர் சங்கம் காத்திருப்பு போராட்டம்

வருவாய் கிராம ஊழியர் சங்கம் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை, 3:00 மணி முதல், 6:00 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வட்ட தலைவர் இளையவன் தலைமை வகித்தார். இதில், கிராம உதவியாளர்களின் வாழ்வாதார கோரிக்கையான காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும்.சி.பி.எஸ்., திட்டத்தில், ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த ஊழியர்களிடம் பிடித்த செய்த பண பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டது. இதில், மாவட்ட தலைவர் சின்னசாமி, பொருளாளர் ராஜேஷ்கண்ணா, மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி, வட்ட செயலாளர் கணேசன், துணைத்தலைவர் குமரேசன், இணை செயலாளர் தமிழரசன் ஆகியோர் பேசினர்.* தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று மதியம், 3:00 முதல், மாலை, 6:00 மணி வரை, காத்திருப்பு போராட்டம் நடந்தது. வட்ட தலைவர் சூடப்பன் தலைமை வகித்தார். செயலாளர் முனிமாரப்பன் முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு பணி நிறைவு பெற்ற வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில செயலாளர் லட்சுமணன், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பிரசார செயலாளர் ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க வட்ட பொருளாளர் சுகந்தன் உட்பட பலர், கோரிக்கை குறித்து பேசினர்.அதேபோல், ஓசூர் தாலுகா அலுவலகத்தில், வட்ட தலைவர் ஆறுமுகம், சூளகிரியில் வட்ட துணைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை