உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மந்தகதியில் சாலை விரிவாக்க பணி பாகலுார் சர்க்கிளில் தேங்கும் கழிவுநீர்

மந்தகதியில் சாலை விரிவாக்க பணி பாகலுார் சர்க்கிளில் தேங்கும் கழிவுநீர்

பாகலுார்:ஓசூர் அருகே, பாகலுார் போலீஸ் ஸ்டேஷன் அருகே, மாலுார், பேரிகை செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கின்றன. அதேபோல், பேரிகை மற்றும் கர்நாடகாவின் மாலுார் பகுதியில் இருந்து சர்ஜாபுரம் செல்லும் வாகனங்களும், இந்த சர்க்கிள் வழியாகத்தான் செல்ல வேண்டும். தினமும் பல ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் இப்பகுதியில், மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்கம் மற்றும் சாலையோரம் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை, கடந்த ஒரு மாதத்திற்கு முன் துவங்கியது. மந்தகதியில் பணிகள் நடப்பதால், கழிவுநீர் சாலைக்கு வந்து பாகலுார் சர்க்கிள் பகுதியிலுள்ள குண்டும், குழியுமான சாலையில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.பாகலுார் சர்க்கிள் பகுதியில் மோசமாக உள்ள சாலையால், வாகனங்களை விரைவாக இயக்க முடிவதில்லை. அப்பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையிடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும், பணிகளை விரைந்து முடிக்காமல், காலம் தாழ்த்தப்படுகிறது. இப்பகுதியில் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்கு முன்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ