மேலும் செய்திகள்
ரூ.37 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் துவக்கம்
14-Nov-2024
ரூ.42.50 லட்சத்தில் சாலை பணிகள்ஓசூர், நவ. 15-ஓசூர், ஊராட்சி ஒன்றியம் சேவகானப்பள்ளி பஞ்., சாய்பாபா கோவிலுக்கு செல்லும் மண் சாலையில், 26.50 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலையும், ஆலுார் பஞ்., கதிரேப்பள்ளி கிராமத்தில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவுநீர் கால்வாயும், கதிரேப்பள்ளி கிராமத்தில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலையும், பேரண்டப்பள்ளி பஞ்., மோரனப்பள்ளியில் நரசிம்ம சுவாமி கோவில் முன்பு, 9 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலையும் அமைப்பதற்கான பணிகளை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார்.இதில், ஒன்றிய செயலாளர்கள் கஜேந்திரமூர்த்தி, நாகேஷ், துணை செயலாளர் ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் சம்பத், பஞ்., தலைவர்கள் வீரபத்திரப்பா, பிரகாஷ், வெங்கடேஷ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் தேவராஜ், பஞ்., துணை தலைவர் சந்தோஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
14-Nov-2024