உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மொபட்டில் வைத்திருந்த ரூ.2.50 லட்சம் திருட்டு

மொபட்டில் வைத்திருந்த ரூ.2.50 லட்சம் திருட்டு

ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம், 42. வீடு கட்டி வருவதால், அதற்கு தேவையான பணத்தை, ஊத்தங்கரையில் உள்ள தனியார் வங்கியில் கடந்த, 6ம் தேதி பணம் எடுத்துக்கொண்டு தன், டி.வி.எஸ்., ஸ்கூட்டியின் டிக்கியில் வைத்து எடுத்து சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர், அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.ஊத்தங்கரை - சேலம் சாலையில் உள்ள தனியார் இரும்பு கடையின் உள்ளே சென்று, கடைக்காரரிடம் பேசி கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், லாவகமாக ஸ்கூட்டி சீட் அடியில் வைத்திருந்த, 2.50 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றுள்ளார். ஸ்ரீராம் வந்து பார்த்தபோது பணத்தை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இரும்பு கடையிலுள்ள, சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது, மர்மநபர் ஒருவர், மொபட் சீட் அடியில் வைத்திருந்த பணத்தை எடுத்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.புகார் படி, ஊத்தங்கரை போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை