கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான வக்கீல் குடும்பத்துக்கு ரூ.7.09 லட்சம் நிதி வழங்கல்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரங்கசாமிபிள்ளை தெருவை சேர்ந்-தவர் கண்ணன், 30, வக்கீல்; கடந்த, 20 மதியம், 1:00 மணிக்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயில் பகுதியில் வைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். இதில் படுகாயமடைந்த வக்கீல் கண்ணன், ஓசூர் தனியார் மருத்-துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக, ஓசூர் நாமல்பேட்டையை சேர்ந்த வக்கீல் குமாஸ்தா ஆனந்தகுமார், 39, அவரது மனைவி வக்கீல் சத்தியவதி, 33, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ள வக்கீல் கண்ணன் மருத்துவ செலவுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என, அவரது குடும்பத்தினர் வக்கீல்கள் சங்கங்களிடம் முறையிட்டனர்.இதையடுத்து ஓசூர் வக்கீல்கள் சங்கம், 3.34 லட்சம் ரூபாய், கிருஷ்ணகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கம், 2.75 லட்சம் ரூபாய், வக்கீல்கள் கூட்டமைப்பு, 1 லட்சம் ரூபாய் என மொத்தம், 7.09 லட்சம் ரூபாயை மருத்துவ செலவிற்காக, வக்கீல் கண்ணன் குடும்பத்திடம், ஓசூர் வக்கீல் சங்க தலைவர் ஆனந்தகுமார், நிர்-வாகிகள் திம்மராயப்பா, கோவிந்தராஜூலு, சக்தி நாராயணன் கூட்டமைப்பு நிர்வாகிகள் மாரப்பன், முரளிபாபு உட்பட பலர் இணைந்து வழங்கினர்.