ஊரக வாழ்வாதார இயக்க தொகுப்பூதிய அலுவலர்கள் மனு
ஊரக வாழ்வாதார இயக்கதொகுப்பூதிய அலுவலர்கள் மனுகிருஷ்ணகிரி, அக். 1-கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் வட்டார இயக்க மேலாளர் வட்டார ஒருங்கிணைப்பாளர், 55 பேர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:நாங்கள் கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில், வட்டார மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறோம். மொத்தமுள்ள, 72 பணியிடங்களில், 55 பேர் மட்டுமே பணிபுரிகிறோம். மகளிர் குழுக்கள் பணிகளுடன், காலை உணவுத்திட்டம் மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறோம். ஆனால் எங்களை, பணி நிரந்தரம் செய்யாமல், ஆண்டுதோறும் தொகுப்பூதிய ஊழியர்களாகவே புதுப்பித்து வருகின்றனர். சம்பளமும் மிக குறைவாகவும், ஊதிய உயர்வும் கொடுப்பதில்லை. எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை, மகப்பேறு கால விடுப்பு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கவில்லை. எங்களுக்கான அடையாள அட்டை இல்லை. விடுப்பு எடுத்தால், சம்பள பிடித்தம் செய்யப்படுகிறது. இது குறித்து விளக்கமாக, மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.