உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி செந்தில் பள்ளியில் சன்ஸ்கார் கலாசார விழா

கிருஷ்ணகிரி செந்தில் பள்ளியில் சன்ஸ்கார் கலாசார விழா

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, செந்தில் பப்ளிக் பள்ளியில், 'சன்ஸ்கார்' கலாசார விழா நடந்தது. இதில் மாணவர்களின் கலை, பண்பாடு மற்றும் நாகரிகம் சார்ந்த திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன. விழாவில், தனியார் பள்ளி டி.இ.ஓ., கோபாலப்பா, செந்தில் பள்ளிக்குழும தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர் ஆகியோர் தலைமையில் விழா நடந்தது. இதில், பாடசாலை மாணவர்களின் கண்கவர் நடனங்கள் மற்றும் கலாசார பாடல்கள், பார்வையாளர்களை கவர்ந்தன. கலாசார விழா என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் ஒரு முக்கிய படியாகும் என, பள்ளி செயலாளர் தனசேகர் பேசினார்.தொடர்ந்து, தேசிய மற்றும் உலகளவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். இதற்கான ஏற்பாடுகளை, நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், சி.இ.ஓ., மாதையன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர் வேங்கட அழகிரி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !