உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் சாரண, சாரணியர் பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரியில் சாரண, சாரணியர் பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் நடந்து வரும் சாரண, சாரணியர் பயிற்சி முகாமில், 258 பேர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அளவிலான சாரண, சாரணியர் திருத்திய சோபன் பயிற்சி முகாம் கடந்த, 28 முதல் இன்று (அக். 31) வரை, கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது. முகாமில் அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த சாரணர், 133 பேரும், சாரணியர் 152 பேரும் என மொத்தம், 258 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக முகாமை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட கல்வி அலுவலர் கவுசர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், சாரண இயக்க மாவட்ட செயலாளர் சர்வேசன், தேசிய பயிற்சியாளர்கள் கிருஷ்ணன், ராஜகோபால், பயிற்சி ஆணையர் அர்த்தனாரி, துணைத் தலைவர் நரசிம்மன், உதவி ஆணையர் ஞானபிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியருக்கு சாரண, சாரணியர் இயக்கம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை