உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மக்கள் உரிமைகளுக்காக சீமான் போராடுவதில்லை

மக்கள் உரிமைகளுக்காக சீமான் போராடுவதில்லை

ஓசூர்: ''சீமான் மக்கள் உரிமைகளுக்காக போராடுவதில்லை,'' என, திண்டுக்கல், மா.கம்யூ., - எம்.பி., சச்சிதானந்தம் பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க, 18வது மூன்று நாள் மாநில மாநாடு நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, ஓசூர் - தேன்கனிக்-கோட்டை சாலையிலுள்ள ஆர்.சி., தேவாலயம் அருகே துவங்கிய பேரணி, ஏரித்தெரு, காந்தி சிலை, பழைய பெங்களூரு சாலை, பஸ் டிப்போ வழியாக சென்று, ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியில் நிறைவு பெற்றது. அங்குள்ள, 100 அடி சாலையில் நேற்று முன்-தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. மாநில தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார்.திண்டுக்கல், மா.கம்யூ.,- எம்.பி., சச்சிதானந்தம் பேசும்போது, ''தமிழ் தேசியம் பேசும் சீமான், தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடுவதில்லை. மாறாக மலை, மரம், மாடுகளுக்கு மாநாடு நடத்துகிறார்,'' என்றார்.மாநில செயலாளர் சிங்காரவேல், அகில இந்திய தலைவர் ரஹீம் எம்.பி., மாவட்ட தலைவர் நஞ்சாரெட்டி, மா.கம்யூ., கட்சி மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், முத்துக்கண்ணன், மாநில குழு உறுப்பினர் பத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை