மேலும் செய்திகள்
டிரைவரை மிரட்டி மொபைல் பறித்து சென்ற 2 பேர் கைது
04-Oct-2024
தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைதுரூ.5 லட்சம், 16 பவுன் நகை பறிமுதல்ஓசூர், அக். 20-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் பின்புறமுள்ள வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர் ரமேஷ், 50; பூ வியாபாரி. கடந்த மார்ச், 15 ல், இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த, 24 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார், அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர். இதில், கர்நாடகா மாநிலம், மைசூரு ராஜிவ் நகரை சேர்ந்த சையத் அபுபக்கர், 46, திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.அப்போது தப்பி செல்ல முயன்ற சையத் அபுபக்கர், கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு, ஓசூர் அரசு மருத்துவமனையில் மாவு கட்டு போடப்பட்டது. அவரிடம் விசாரித்த போது, ஓசூர் சாந்தபுரம் செந்தமிழ் நகரில் உள்ள ஒரு வீட்டில் கடந்தாண்டு ஜூன் மாதம், 12 லட்சம் ரூபாய் திருடியது தெரியவந்தது. அவரிடம் இருந்து, 16 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
04-Oct-2024