உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேப்பனஹள்ளியில் கடும் குளிர்

வேப்பனஹள்ளியில் கடும் குளிர்

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது பனிப்பொழிவு துவங்கியுள்ளது. மலைக்கிராமங்கள் அதிகமுள்ள வேப்பனஹள்ளி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக, பனிப்பொழிவுடன், கடும்குளிர் நிலவுகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிருடன் வீசும் காற்றால் பொதுமக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மாலை துவங்கி மறுநாள் காலை, 10:00 மணி வரை பனிப்பொழிவு நீடிப்பதால், சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டமும் குறைந்துள்ளது. அதேபோல கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலையில், கம்பளி போர்வை, ஸ்வெட்டர் விற்பனையும் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ