மேலும் செய்திகள்
போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை 'ஜோர்'
08-Dec-2025
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரால் நேற்று போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு, 800க்கும் குறைவான ஆடுகளை வியாபாரிகள், விவசா-யிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.அதேபோல் ஆடுகளை வாங்க, வியாபாரிகள் வராமல் இருந்தனர். இதனால், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆட்டுச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.அதேபோல் நாட்டின மாடுகள், கறவை மாடுகள் சந்தையும் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வாரச்சந்தையில் வியாபாரம் மந்தமாக இருந்-தது. ஆடுகள், கறவை மாடுகள் குறைந்த அளவே விற்பனையான நிலையில், விற்பனை ஆகாத ஆடுகளுடன் விவசாயிகள், வியாபாரிகள் திரும்பிச் சென்றனர்.இதனால், போச்சம்பள்ளி வாரச்சந்தையில், 15 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
08-Dec-2025