மேலும் செய்திகள்
ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்காததால் மக்கள் சிரமம்
14-Apr-2025
அஞ்செட்டி:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே ஜேசுராஜபுரத்தை சேர்ந்த விவசாயி மதலைமுத்து, 65. மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றிருந்த நிலையில், ஏழுசுத்து கோட்டை வனத்தில், யானைகள் தாக்கி உயிரிழந்தார். வழக்கமாக யானை தாக்கி உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் அரசு சார்பில் இழப்பீடாக வழங்கப்படும். முதற்கட்டமாக ஈமசடங்கிற்கு, 50,000 ரூபாயை வனத்துறையினர் வழங்குவர். ஆனால், விவசாயி மதலைமுத்து வனப்பகுதிக்குள் சென்று யானைகளால் உயிரிழந்ததாக கூறி, வனத்துறை சார்பில் முதற்கட்டமாக ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும், 50,000 ரூபாய் கூட நேற்று வரை வழங்கப்படவில்லை.அதனால், அரசு சார்பில் இழப்பீடு மதலைமுத்துவிற்கு கிடைப்பது சிரமம் என்ற நிலை உருவாகியுள்ளது. அவரது மனைவி அருள்மேரி, 53, மற்றும் இரு மகன்கள் வறுமையில் உள்ள நிலையில், கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.வறுமையில் வாடும் மதலைமுத்து குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார். மேலும், சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர இருப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.
14-Apr-2025