மேலும் செய்திகள்
நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கை
01-Nov-2025
ஓசூர் ஓசூரில் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை மீறி, பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினனர். அதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட, 65 பேர் கைது செய்யப்பட்டனர்.ஓசூரில், மேம்பாலம் அடியிலும், நடைபாதையிலும், ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை நேற்று மாநகராட்சி அகற்றியது. மறியல் செய்த, 65 பேர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு அடியிலும், சர்வீஸ் சாலையோரம் உள்ள நடைபாதையிலும், 100 க்கும் மேற்பட்ட பூக்கடைகள், தள்ளுவண்டியில் உணவு மற்றும் பழக்கடைகள் அதிகளவில் வைக்கப்பட்டிருந்தன. அதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததுடன், சுகாதாரமற்ற நிலை உருவானது. நடைபாதையில் நடக்க முடியாமல், மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இது தொடர்பாக கடந்த, 25ம் தேதி காலைக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றது. ஆனால், அ.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சியினர், வியாபாரிகளுடன் சேர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தும் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில், அப்பகுதியில் வியாபாரிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹட்கோ மற்றும் ஓசூர் டவுன் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட, 60 பெண்கள் உட்பட, 65 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதன் பின், மேம்பால அடியிலும், நடைபாதையிலும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அதனால், மக்கள் எந்த இடையூறும் இல்லாமல் நடைபாதையில் செல்ல முடிந்தது. வரும் நாட்களில் மீண்டும் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்கும் வகையில், மாநகராட்சி கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என, வியாபாரிகள், அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
01-Nov-2025