உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தாயை அரிவாளால் தாக்கிய மகன் கைது

தாயை அரிவாளால் தாக்கிய மகன் கைது

ஓசூர்:ஓசூர் தர்கா கலைஞர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி பூவாயி, 45. பூக்கடை நடத்தி வருகிறார்; இவரது மகன் சசிக்குமார், 27, டைல்ஸ் ஒட்டும் வேலை செய்கிறார்; கடந்த, 14ம் தேதி காலை, 11:00 மணிக்கு தாய் பூவாயிடம், மது வாங்குவதற்காக சசிக்குமார் பணம் கேட்டார். அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த சசிக்குமார், தனது தாயை தகாத வார்த்தையால் திட்டி, அரிவாளால் தாக்கி மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகார்படி, சசிக்குமாரை நேற்று முன்தினம் சிப்காட் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை