உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விரைவில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரும்: மாநில இளைஞர் காங்., தலைவர் ஆருடம்

விரைவில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரும்: மாநில இளைஞர் காங்., தலைவர் ஆருடம்

ஓசூர்: ''விரைவில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரும்,'' என, மாநில இளைஞர், காங்., தலைவர் லெனின் பிரசாத் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இளைஞர், காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மேற்கு மாவட்ட தலைவர் அப்துார் ரஹ்மான் தலைமையில் நடந்தது. மாவட்ட, காங்., தலைவர் முரளிதரன், மாநில செயலாளர் தேன்கு அன்வர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி., செல்லக்குமார் பேசினார். கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர், காங்., மாநில தலைவர் லெனின் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக இளைஞர், காங்., சார்பில் ராகுலை அழைத்து, மிகப்பெரிய மாநில மாநாடு நடத்தப்படும். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் மீது சுமையை உயர்த்தி கொண்டே இருக்கிறார்கள். வசூல் செய்யும் பணத்தில் சாலைகளை பராமரிப்பது கிடையாது. தமிழம் மட்டுமின்றி இண்டியா கூட்டணி எங்கெல்லாம் வலுவாக உள்ளதோ, அங்கு வஞ்சிக்கப்படும் நிலை உள்ளது. விரைவில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரும். ராகுல் பிரதமராக வருவார். இவ்வாறு, அவர் கூறினார்.அகில இந்திய, காங்., செயலாளர்கள் வைசாக், ஷாகரிகா ராவ், இளைஞர், காங்., மாநில பொதுச்செயலாளர்கள் விக்னேஷ்பாபு, சரவணன், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன், தேன்கனிக்கோட்டை நகர தலைவர் பால்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை