தென்மண்டல அளவிலான த்ரோபால் போட்டி
ஓசூர், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி என, 4 மாநிலத்தை உள்ளடக்கிய தென்மண்டலத்தில் இயங்கும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களை ஊக்கப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும், ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், பெண் ஊழியர்களுக்கான த்ரோபால் (எறிபந்து) போட்டி நேற்று துவங்கியது. இதில், திருநெல்வேலி, மதுரை, கரூர், கர்நாடகாவின் மைசூரு, கோலார் மற்றும் பெங்களூருவில் உள்ள தென்மண்டல அலுவலகம் என மொத்தம், 6 பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ளன. இரு நாட்கள் நடக்கும் போட்டிகள், லீக் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. போட்டிகளை, தென்மண்டல நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் நேற்று துவக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது. மேலும், வெற்றி பெறும் அணி, மற்றொரு தென்மண்டலமான ஆந்திரா, தெலுங்கானாவிற்கு இடையே நடந்த த்ரோ பால் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியுடன் மோதும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மண்டல மனிதவள பிரிவு பொது மேலாளர் தன்வீர் உட்பட பலர் பங்கேற்றனர்.