நலம் காக்கும் ஸ்டாலின் மத்துாரில் சிறப்பு முகாம்
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் வடக்கு ஒன்றியத்தில், மத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்த இந்த முகாமை பர்கூர், தி.மு.க.,- எம்.எல்.ஏ., மதியழகன் துவக்கி வைத்தார். இதில் பொது மருத்துவம், இருதயம், எலும்பியல், நரம்பியல், தோல், காது, மூக்கு மற்றும் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு முகாமில், கலந்து கொண்டவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட தொற்று நோய் நிபுணர் கார்த்திக், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் மற்றும் 17 சிறப்பு மருத்துவர்கள், வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி மற்றும் மருத்துவர்கள் மஞ்சுநாதன், கவின் உள்ளிட்ட சுகாதார துறை செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், மத்துார், தி.மு.க., ஒன்றிய செயலாளர் வசந்தரசு மற்றும் தி.மு.க.,வை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இம்முகாமில், 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.