உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நாகபஞ்சமியை முன்னிட்டு நாகம்மாளுக்கு சிறப்பு யாகம்

நாகபஞ்சமியை முன்னிட்டு நாகம்மாளுக்கு சிறப்பு யாகம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை கோ-ஆபரேடிவ் காலனி, 2வது கிராசிலுள்ள நாகம்மாள் கோவிலில், 19ம் ஆண்டு நாகசதுர்த்தி, நாகபஞ்சமி, உற்சவர் மூர்த்தி மஹா அபிஷேக திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. நாகம்மாளுக்கு, நாகசதுர்த்தி, நாகபஞ்சமி பூஜை மற்றும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.நேற்று காலை, 6:00 மணிக்கு, கணபதி பூஜை, நவகிரக ஹோமம், நாகம்மாள் ஹோமம், சப்த கன்னி ஹோமம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ஹோமத்தில் நவதானியங்கள் மற்றும் வாசனை திரவியமிட்டு, வேண்டுதலை நிறைவேற்றினர். 9:00 மணிக்கு, பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, நாகம்மாளுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.* காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவிலுள்ள மாரியம்மன் கோவிலில், நாகம்மா, ராகு, கேது பகவானுக்கு நேற்று அபி‍ஷேக, ஆராதனை நடந்தது. தென்பெண்ணை ஆற்றங்கரையிலுள்ள ராம பக்த வீர ஆஞ்சநேயர் கோவிலில், நாக சதுர்த்தி மற்றும் நாகபஞ்சமி வளர்பிறை, கருட பஞ்சமியையொட்டி, வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ