ஸ்ரீமாருதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேசிய போட்டிகளில் வென்று சாதனை
ஸ்ரீமாருதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள்தேசிய போட்டிகளில் வென்று சாதனைகிருஷ்ணகிரி, அக். 19-கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி அடுத்த வி.மாதேப்பள்ளியிலுள்ள ஸ்ரீமாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும், 100 சதவீத தேர்ச்சியுடன் பல்வேறு சாதனைகள் படைத்து வருகின்றனர்.மத்திய அரசின், 'பிட் இந்தியா இயக்கம்' சார்பில் கோவாவில் கடந்த, 8 முதல், 3 நாட்கள் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் ஸ்ரீமாருதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 100 மீ., ஓட்டப்பந்தயத்தில், 10ம் வகுப்பு மாணவர் சச்சிந்திரா தங்கம் வென்றார். அதேபோல் இப்பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு அணியிலும் பங்கேற்று விளையாடினர். அதன்படி மாணவர் கார்த்திக்ராஜா கபடி போட்டியில் பங்கேற்றார். வாலிபால் அணியில், இப்பள்ளி மாணவர் காட்வின் எபினேசர் பங்கேற்றார். இந்த அணிகளும் தங்கப்பதக்கம் வென்றன.ஸ்ரீமாருதி மெட்ரிக் பள்ளி சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கங்கள் வாங்கிய, 3 மாணவர்களையும் பள்ளி நிறுவனர் ஜெயராமன், தாளாளர் தனுஜா, சேர்மன் நவீன்குமார், மேகமாலா மற்றும் பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்டோர் வாழ்த்தினர். இம்மாணவர்கள் அனைவரும், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.