துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
ஊத்தங்கரை, ஊத்தங்கரையிலுள்ள, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், 34 ஆண்டுகளுக்கு பிறகு மகாபாரத சொற்பொழிவு துவங்கியது.தர்மராஜா, திரவுபதி அம்மன், கிருஷ்ணர், பீமன், அர்ஜூனன், நகுல சகாதேவன் சுவாமிகளை மேடையில் அலங்கரித்து வைத்துள்ளனர்.நேற்று, 18ம் நாள் பாரத சொற்பொழிவு மற்றும் துரியோதனன் படுகளம் தெருக்கூத்து நாடகம் நடந்தது. திரவுபதி தன் சபதமான துரியோதனன் ரத்தத்தால் தன் கூந்தலை நனைத்து கூந்தல் முடித்தல், பீமன் துரியோதனன் ரத்தத்தை குடித்து, தன் சபதத்தை முடித்துக் கொண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் ஊத்தங்கரை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.