உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 750 கிராம் எடையில் பிறந்த பச்சிளம் குழந்தை காப்பாற்றிய செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி

750 கிராம் எடையில் பிறந்த பச்சிளம் குழந்தை காப்பாற்றிய செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி

ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கடந்த ஜூலை, 9ம் தேதி, கருவுற்று, 25 வாரங்களான கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, 750 கிராம் எடையில் குழந்தை பிறந்தது. பிரசவ காலத்திற்கு முன்கூட்டியே குழந்தை பிறந்ததால், சுவாச பிரச்னை, நோய் தொற்று மட்டுமின்றி, மூளையில் ரத்தக்கசிவு ஏற்படாமல் பாதுகாக்க, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.குழந்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், 24 மணி நேரமும் குழந்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர் சிகிச்சையால், குழந்தைக்கு எவ்வித சுவாச பிரச்னை, பார்வை குறைபாடு மற்றும் நோய் தொற்று ஏற்படவில்லை. ஒரு கிலோ, 500 கிராம் எடையுடன், குழந்தை தாய்ப்பால் குடிக்க ஆரம்பித்தது. அதனால், கடந்த சில நாட்களுக்கு முன், தாய், சேய் இருவரும், பத்திரமாக வீடு திரும்பினர். இந்த சவாலான சூழ்நிலையை திறம்பட கையாண்ட மகப்பேறு மருத்துவர்கள், பச்சிளம் குழந்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு, மருத்துவக்கல்லுாரி செயலாளர் லாசியா தம்பிதுரை, முதல்வர் ராஜா முத்தையா, மருத்துவ அலுவலர் கிரீஷ் ஓங்கல், இருப்பிட மருத்துவ அலுவலர் பார்வதி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை