உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உங்களுடன் ஸ்டாலின் முகாம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், இரு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. மூன்றாம் கட்ட முகாம் கடந்த மாதம், 16ம் தேதி துவங்கி, வரும், 14ம் தேதி வரை நடக்கிறது. வரும், 7ம் தேதி ஓசூர் மாநகராட்சி, 33 வது வார்டுக்கு, ஓசூர் சாந்தி நகர், சி.எஸ்.ஐ., பள்ளியில் முகாம் நடக்க உள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி நகராட்சி, 7, 15 வது வார்டுகளுக்கு, கிருஷ்ணகிரி டி.பி ரோட்டில் உள்ள விநாயகா மகாலிலும், ஊத்தங்கரை ஒன்றியம், திருவனப்பட்டி, பெரியகோட்டகுளம் ஆகிய பஞ்.,களுக்கு, திருவனப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது.மேலும் ஓசூர் ஒன்றியம், பூனப்பள்ளி பஞ்.,க்கு, பூனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், கிருஷ்ணகிரி ஒன்றியம், பெத்தனபள்ளி பஞ்.,க்கு, போகனப்பள்ளி கிராமத்தில் உள்ள காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் அரங்கத்திலும், பர்கூர் ஒன்றியம், போச்சம்பள்ளி பஞ்.,க்கு போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்க உள்ளது. பொதுமக்கள் முகாமில் மனுக்கள் வழங்கி பயனடையலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !