உங்களுடன் ஸ்டாலின் முகாம் போச்சம்பள்ளி, செப். 26
காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, பாப்பாரப்பட்டி, வாடமங்கலம், கோட்டப்பட்டி, கீழ்குப்பம் உள்ளிட்ட பஞ்.,களுக்கு, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று அரசம்பட்டி முத்தமிழ் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமில், 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். இதில் காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., சரவணன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.