உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / படேதலாவ் ஏரிக்கு எண்ணேகொள் கால்வாய் திட்டத்தில் தண்ணீர் விட நடவடிக்கை: கலெக்டர்

படேதலாவ் ஏரிக்கு எண்ணேகொள் கால்வாய் திட்டத்தில் தண்ணீர் விட நடவடிக்கை: கலெக்டர்

கிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரியில் அடுத்த பருவமழை காலம் துவங்கும் முன், படேதலாவ் ஏரிக்கு எண்ணேகொள் கால்வாய் மூலம் தண்ணீர் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கிருஷ்-ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறினார்.கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில், விவசாயிகள், அதிகாரிகள் இடையே நடந்த விவாதம் வருமாறு:விவசாயி கென்னடி, அரசம்பட்டி: உயர்ரக தென்னையில் குட்டை, நெட்டை மகரந்த சேர்க்கை உற்பத்தியை அதிகரிக்க ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. மற்ற மாவட்டங்களில் அரசு, 752 ரூபாய் கூலி வழங்கும் நிலையில், நம் மாவட்டத்தில், 552 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர். ஆட்கள் கூலியை உயர்த்தி வழங்கினால் தென்னை விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.கலெக்டர் தினேஷ்குமார்: இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோ-சித்து நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயி ஜே.பி.கிருஷ்ணன், சப்பானிப்பட்டி: எண்ணேகொள் புதுாரில் இருந்து, வறண்ட பகுதிக்கு கால்வாய் எடுத்து செல்லும் திட்டம் மந்த கதியில் நடந்து வருகிறது.கலெக்டர் தினேஷ்குமார்: எண்ணேகொள் கால்வாய் திட்டத்தில் வலதுபுற கால்வாய் திட்டத்தில், 70 சதவீத பணிகள் முடிந்துள்-ளன. இடதுபுற கால்வாய் அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது. அப்பணிகளும் விரைவில் முடிந்து, வரும் மழை காலத்திற்குள், கிருஷ்ணகிரி, பெரிய ஏரி எனப்படும் படே-தலாவ் ஏரிக்கு எண்ணேகொள் கால்வாய் நீர் வரும்.விவசாயி ஜே.பி.கிருஷ்ணன், சப்பானிப்பட்டி: கே.ஆர்.பி., அணையிலிருந்து வெளியேற்றப்பட்டும் நீரை நம்பி இரண்டாம் போக நெல்சாகுபடிக்கு விவசாய பணிகள் நடந்து வருகிறது. எப்-போது தண்ணீர் திறக்கப்படும்கலெக்டர் தினேஷ்குமார்: ஜனவரி இரண்டாவது வாரத்தில், அனேகமாக ஜன.,9ல், நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும்.நசீர் அகமத், கங்கலேரி: மா விவசாயிகள் கல்தார் வைத்து பருவம் தவறிய மா சாகுபடி செய்வதை தடுக்க வேண்டும்.கலெக்டர் தினேஷ்குமார்: இது குறித்து மா விவசாயிகளிடத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் கல்தாருக்கு ஆதரவாக, 291 பேரும், எதிராக, 248 பேரும் ஓட்டளித்தனர். இருப்பினும் கல்தார் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு விவாதம் நடந்தது.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்-குனர் கவிதா, வேளாண்மை இணை இயக்குனர் காளிமுத்து உள்-பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ