உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போக்சோவில் மாணவன் கைது

போக்சோவில் மாணவன் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே பூஞ்சோலை கிரா-மத்தை சேர்ந்தவர் வையாபுரி மகன் விக்கி, 19. கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ இ.சி.இ., இரண்டா-மாண்டு படிக்கிறார்; இவர், அஞ்செட்டி பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி கொடுத்த மாணவன் விக்கி, கடந்த நவ., 26 காலை, 11:00 மணிக்கு, தன் வீட்டில் வைத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக, தேன்க-னிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கடந்த, 29ல், சிறுமி புகார் செய்தார். போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், தலைமறைவாக இருந்த மாணவன் விக்கியை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை